தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளுக்கு (பி.கே.பி.டி) உட்பட்ட கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ முர்னி குடியுருப்பு பகுதியில் இருந்து, பத்து தொகுதி எம்.பி. பி பிரபாகரன் போலீசாரால் வெளியேற்றப்பட்டார்.
பிரபாகரன் செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக பி.கே.ஆர் பிரதிநிதி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, பிரபகரன், கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் எட்மண்ட் சாந்தாராவுடனான “மோதலுக்கு” பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றார்.
“நாடாளுமன்ற உறுப்பினராக என் கடமைகளைச் செய்ய, நான் காவல்துறையின் அனுமதியுடன் அங்கு சென்றேன்.
உள்ளே நுழைந்ததும், நான் அங்கிருந்த கட்டளை மையத்திற்குச் (command centre) சென்றேன், எட்மண்ட் அங்கே இருந்தார்.
“போதுமான உணவு இல்லை என்று புகார் கூறும் மக்களுக்கு உதவக்கூடிய வகையில் பொதுநலத் துறையை தயார் நிலையில் இருக்க பரிசீலிக்குமாறு நான் அவரிடம் கேட்டுக்கொண்டேன்”.
“ஆனால் அவர் என்னை அங்கிருந்து வெளியேறச் சொன்னார்,” என்று அவர் கூறினார். இது அவர்களுக்கு இடையே வாய்மொழி வாக்குவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.
மையத்தை விட்டு வெளியேறியதும், ஐ.பி.டி.க்கு வருமாறு போலிசார் கேட்டுக் கொண்டதாக பிரபாகரன் கூறினார்.
இந்த நேரத்தில் பிரபாகரன் கைது செய்யப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
செந்தூல் மாவட்ட காவல்துறைத் தலைவர் எஸ்.சாமுகமூர்த்தியைத் தொடர்பு கொண்டபோது, அவர் கூட்டத்தில் இருப்பதாகவும், இது குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
இதற்கிடையில், சந்தராவின் செயலாளர் ஆர் தினேஸ்வரன் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
பிரபாகரன் மையத்திற்கு வந்தபோது, சந்தாரா, போலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகளுடனான பி.கே.பி.டி கூட்டத்திற்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்ததாக கூறினார்.
“ஒய்.பி. (சந்தாரா) அவரை கூட்டம் முடியும் வரை காத்திருக்குமாறு பணிவுடன் கேட்டார். பிரபாகரன் பொய் சொல்கிறார்” என்று தினேஸ்வரன், பிரபாகரனின் கூற்றுக்கு உடனடியாக பதிலளித்துள்ளார்.