கோவிட்-19 பரவலைக் குறைக்க உதவும் வகையில், ஏப்ரல் 23 முதல் அனைத்து மலேசிய ஏர்லைன்ஸ் பயணிகளும் தங்கள் முகக்கவரியை கட்டாயம் அணிய வேண்டும்.
அனைத்து உள்நாட்டு, அனைத்துலக மற்றும் மலேசியா ஏர்லைன்ஸ் சிறப்பு விமானங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் – கைக்குழந்தைகள் தவிர – இந்த தேவை பொருந்தும்.
ஒவ்வொரு பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் மலேசியா ஏர்லைன்ஸில் தெளிவுபடுத்தியது.
“விமானக்களில் ஏறும் போது முகக்கவரி இல்லாத அல்லது அணியாத பயணிகளை மலேசியா ஏர்லைன்ஸ் ஏற்றுக்கொள்ளாது”.
“பயணிகளின் வசதிக்காக, குறிப்பாக நீண்ட தூர விமானங்களில் பயணிக்கும் பயணிகள், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கூடுதல் முகக்கவரி மற்றும் கைத்தூய்மி, கிருமிநாசினி திரவத்தை கொண்டு வர அறிவுறுத்தப்படுகிறீர்கள்” என்று அவர் கூறினார்.
மற்றவர்களின் தனிப்பட்ட வசதியை மதிக்கவும், தேவைக்கேற்ப கூடல் இடைவெளி குறித்து கவனம் செலுத்தவும், பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும் பயணிகள் நினைவூட்டப்படுகிறார்கள். பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதை உறுதிசெய்ய இவை உதவும் என்பதால் இதை பின்பற்ற பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.