கடந்த 9 ஏப்ரல் அன்று, பொதுமக்களுக்கு அச்சத்தை ஊட்டும் வகையில் முகநூலில் ஒரு அறிக்கையை வெளியிட்ட குற்றச்சாட்டை இன்று ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்துள்ளார் பிரதமர் துறையின் முன்னாள் துணை அமைச்சர் புசியா சல்லே.
குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினரான 61 வயதான புசியா, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505(b) இன் கீழ் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது, அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் விதிக்கிறது.
அடுத்த ஜூன் 16 ஆம் தேதி வழக்கு தொடரப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு ஜாமீன்தாரருடன் RM3,000 ஜாமீன் செலுத்துமாறு மாஜிஸ்திரேட் ஆர் சாலினி உத்தரவிட்டார்.
புசியாவின் முகநூல் பதிவால், சுல்தான் இஸ்கந்தார் கட்டிடத்தில் பீதி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கட்டடம், குடிவரவு, சுங்க மற்றும் சிங்கப்பூரிலிருந்து திரும்பிய மலேசியர்களை தனிமைப்படுத்தும் வளாகமாக இருக்கிறது.
பழைய வீடியோ கிளிப்பைப் பதிவேற்றியதற்காக பின்னர் மன்னிப்பு கோரப்பட்டது.
முன்னதாக, புசியா, காலை 8.20 மணியளவில் தனது கணவர் ரஸ்லி அப்துல் ரஹ்மான் மற்றும் பல ஆதரவாளர்களுடன் ஜொகூர் பாரு நீதிமன்றதிற்கு வந்தார்.