மலேசியாவில், 94 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 5,945 ஆக உள்ளது.
சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளில், வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த மலேசிய குடிமக்கள் சம்பந்தப்பட்ட 72 இறக்குமதி பாதிப்புகளும், 22 உள்ளூர் நோய்த்தொற்றுகளும் அடங்கும் என்றார்.
மேலும் 55 நோயாளிகள் குணமடைந்துள்ளதாகவும், நோய்த்தொற்றுக்கான மொத்த குணப்படுத்துதல்களின் எண்ணிக்கை 4,087 அல்லது 68.75 சதவீதமாக உள்ளதாகவும் நூர் ஹிஷாம் கூறினார்.
இதனால், இன்று பிற்பகல் நிலவரப்படி, மலேசியாவில் 1,758 செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகள் உள்ளன.
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று நூர் ஹிஷாம் கூறினார்.
இவர்களில் 40 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 18 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.
கோவிட்-19 நோய்த்தொற்றுகள் சம்பந்தப்பட்ட புதிய இறப்புகள் எதுவும் மதியம் வரை பதிவாகவில்லை. இதுவரை, கோவிட்-19 நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை நூறாக உள்ளது.
இந்த நோயின் அறிகுறி வெறும் காய்ச்சல் மற்றும் சளி கிடையாது இன்னும் நிறைய அறிகுறிகள் கூறுகிறார்கள் ஆனால் மருத்துவமனையில் காய்ச்சல் இருந்தால் மட்டுமே பரிசோதனை மேற்கொள்கிறார்கள் இவை மாற்றப்பட வேண்டும் அளவு அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்