40 வயது நபர் ஒருவர் நேற்று பாங்கியில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது மனைவி மற்றும் மாமனாரை குத்தி கொலை செய்துள்ளார்.
காவல்துறையின் கூற்றுப்படி, இந்த சம்பவம் தம்பதியர் எதிர்நோக்கியப் பணப்பிரச்சினைகள் தொடர்பான குடும்ப தகராறில் இருந்து வந்தது என்றுள்ளனர்.
இந்த நபர் மோதலில் தனது 40 வயது மனைவியை அடித்து துன்புறுத்தியதாகவும் காஜாங் காவல்துறைத் தலைவர் ஜைத் ஹசான் கூறினார்.
பின்னர், அந்தப் பெண்ணும் அவரது தந்தையும் புகார் செய்ய காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அந்த நபரும் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
“புகார் அளித்த பின்னர், பாதிக்கப்பட்ட அவரது மனைவி, அவரது தந்தை, மற்றும் சந்தேகநபர் (கணவர்) ஆகியோர் ஒரே காரில் வீடு திரும்பி, மனைவி சிகிச்சை பெற வேண்டியதற்காக சில ஆவணங்களை எடுக்கச் சென்றுள்ளனர்.”
“கணவன்-மனைவி இருவரும் தங்கள் கருத்து வேறுபாடுகளை அமைதியாக பேசித் தீர்த்து, அவர்கள் அமைதியாக காவல் நிலையத்தை விட்டு வெளியேறினார்கள்.”
“எந்த மோதலும் வாக்குவாதமும் இல்லை, சந்தேக நபர் வன்முறை நடத்தைக்கான அறிகுறிகளையும் காட்டவில்லை” என்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
இருப்பினும், அவர்கள் மூவரும் வீட்டை அடைந்ததும், கணவர் கத்தியை எடுத்து மனைவி மற்றும் மாமனாரை குத்தி கொலை செய்துள்ளார் என்று ஜாஹித் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக செர்டாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அந்த நபரை கைது செய்ய போலிசார் வீட்டிற்கு வந்தபோது, கதவை திறக்கும்படி கட்டளையிட்டுள்ளனர். ஆனால், அதற்கு பதில் ஒன்றும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.
“காவல்துறையினர் கதவை உடைக்க வேண்டியிருந்தது. குழு வீட்டிற்குள் நுழைந்தபோது, பாதிக்கப்பட்டவரின் (கணவரின்) உடலைக் கண்டனர்,” என்று அவர் கூறினார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324ன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், சந்தேக நபரின் மரணம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டதாகவும் ஜைத் கூறினார்.
நீங்கள் மனச்சோர்வையோ அழுத்தத்தையோ உணர்ந்தால், அல்லது அதை அனுபவிக்கும் ஒருவரை அறிந்தால், நீங்கள் Befrienders-சை 03-79568145 / 8144 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது உதவிக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.
மாநில வாரியான ஆன்லைன் Befrienders பற்றிய கூடுதல் தகவலுக்கு, www.befrienders.org.my ஐப் பார்வையிடவும்.
பொதுநலம், கொடுமை, குடும்ப வன்முறை மற்றும் சிறார் கொடுமை தொடர்பான பிரச்சினைகளுக்கு, கட்டணமில்லா Talian Kasih 15999 எண்ணை அழைக்கவும்.