நோம்புப் பெருநாள் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பிரதம மந்திரி முகிதீன் யாசின் இன்று சிறப்பு செய்தியில் அறிவித்தார்.
மார்ச் 18 ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை (பி.கே.பி) அமல்படுத்தியதைத் தொடர்ந்து, ஊர்களில் அல்லது வேறு இடங்களில் இருந்து வீடு திரும்புவது, அல்லது வேலைக்குச் சென்று வீடு திரும்பும் நோக்கத்தைத் தவிர மாநில எல்லை தாண்டும் பயணங்கள் ஏதும் அனுமதிக்கப்படாது.
“விடுமுறை நாட்களில் மாநில எல்லை தாண்டி, நீங்கள் உங்கள் கிராமத்திற்கு செல்ல அனுமதிக்கப்படாது. மன்னிக்கவும்” என்று அவர் இன்று ஒரு சிறப்பு செய்தியில் தெரிவித்தார்.
இந்த திங்கட்கிழமை தொடங்கி, பொருளாதாரத்தின் அனைத்து துறைகளும் திறக்க, நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை (பி.கே.பி.பி) அமல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவை அறிவிக்கும் போது முகிதீன் இதனைக் கூறினார்.