கிட் சியாங் ‘அரசியல் இடைவெளியை’ கடைபிடிக்க வேண்டும் – அஸ்மின் கிண்டல்

தற்போதைய ‘கூடல் இடைவெளியை’ போலவே “அரசியல் இடைவெளியையும்” கடைபிடிக்குமாறு டிஏபி மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங்கை வலியுறுத்தியுள்ளார் அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி.

பொருளாதாரத்தை மீண்டும் திறக்காத மாநிலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று அச்சுறுத்த முயற்சிப்பதாக தனது முந்தைய அறிக்கையை லிம் விமர்சித்ததை அடுத்து அஸ்மின் இவ்வாறு கூறினார்.

“நாட்டை மீண்டும் ஒழுங்குபடுத்தும் இவ்வேளையில், கிட் சியாங் எல்லாவற்றையும் அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும்.”

“அரசியல் இடைவெளியையும் கொஞ்சம் மேற்கொள்ளுங்கள்” என்று அவர் ட்விட்டரில் கேலி செய்தார்.