பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிமை நியமித்துள்ளது.
இந்த விவகாரத்தை வெளிப்படுத்திய அன்வார், இது குறித்து நாடாளுமனற சபாநாயகர் முகமட் ஆரிஃப் யூசோப்பிற்கு தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
“பாக்காத்தான் செயலாளர், சைஃபுதீன் நாசுஷன் இஸ்மாயில், ஏற்கனவே இம்முடிவை சபாநாயகருக்கு அறிவித்துள்ளார், மேலும் எதிர்க்கட்சிக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து தரப்பினருக்கும் மற்றும் வாரிசானுக்கும் அறிவித்துள்ளார்.”
“அன்வார் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்,” என்று அவர் இன்று முகநூலில் கூறினார்.