செலாயாங்கில் முறையான ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினர் மீது இன்று அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர்.
கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தையைச் சுற்றியுள்ள தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (பி.கே.பி.டி) பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இங்கு இன்னும் இரண்டு நாட்களில், மே 13 அன்று பி.கே.பி.டி. முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் மஸ்லான் லாசிம் இன்று காலை குடிவரவுத் துறை தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உறுதிப்படுத்தினார்.
காவல்துறை, ரேலா, கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம், சுகாதாரத் துறை மற்றும் பல தொடர்புடைய நிறுவனங்கள் இதில் பங்குபெற்றன.
இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த நடவடிக்கையில், ஆவணங்கள் இல்லாத நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சீனா பிரஸ் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, பி.கே.பி.டி. முடிவடைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், மஸ்ஜித் இந்தியாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் முறையான ஆவணமற்ற வெளிநாட்டினரை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கோவிட்-19 பாதிப்புகளின் அதிகரிப்பை காட்டும் பகுதிகளில் பி.கே.பி.டி. விதிக்கப்படுகிறது.
இன்றுவரை, செலாயாங்கில் சில பகுதிகள் மே 12 வரை பி.கே.பி.டி. உத்தரவுக்கு உட்பட்டுள்ளன. அவை:
Pusat Bandar Utara:
Kawasan C: Jalan 2/3A, Pusat Bandar Utara, Kuala Lumpur
Kawasan D: Jalan 2/3A, Pusat Bandar Utara, Kuala Lumpur
Kawasan E1: Taman Sri Murni Fasa 2, Jalan 1/2D, Kuala Lumpur
Kawasan E2: Taman Sri Murni Fasa 1, Jalan 1/2D, Kuala Lumpur
Kawasan E3: Taman Sri Murni Fasa 3, Jalan 1/2B, Kuala Lumpur
Kawasan F: Taman Batu View and Taman Batu Hampar, Kuala Lumpur
Selayang Baru:
Zon C: Jalan Besar Selayang Baru, Jalan 1 and Jalan Indah 21, Selayang Baru, Gombak, Selangor
Zon D: Jalan 3, 5, 7 and 9, Selayang Baru, Gombak, Selangor
Zon E: Jalan 2, 4, 6 and 8, Selayang Baru, Gombak, Selangor
Zon F: Block A, B and C, Selayang Makmur, Gombak, Selangor
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை பல மனித உரிமை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விமர்சித்துள்ளன.
இதனால், வெளிநாட்டினர் கோவிட்-19 சோதனைக்கு முன்வர அச்சத்தைத் தூண்டக்கூடும் என்று எச்சரித்தது.
நேற்று, பெட்டாலிங் ஜெயா ஓல்ட் டவுனைச் சுற்றியுள்ள பகுதியும் பி.கே.பி.டி. கீழ் வைக்கப்பட்டது.