எதிர்க்கட்சி பிரதிநிதிகளால் வேண்டுமென்றே ஆத்திரமூட்டப்பட்டதால் மலாக்கா மாநில சட்டசபையில் “பன்றி” என்ற வார்த்தையை உபயோகிக்கத் தொடங்கியதாக பெங்க்காலான் பாத்து சட்டமன்ற உறுப்பினர் நோர்ஹிசம் ஹசான் பக்தே கூறினார்.
‘துரோகி’, ‘பின் கதவு அரசாங்கம்’ என்ற வார்த்தைகளால் அவர் கேலி செய்யப்பட்டதாகவும், “பன்றி” என்று முதலில் அழைக்கப்பட்டதாகவும், அவர் கூறினார்.
“என்னை முதலில் ‘பன்றி’ என்று அழைத்தனர். நாம் மனிதர்களாகவே பிறந்திருக்கிறோம், பன்றி எனக் கூடாது”.
“ஒரு சட்டமன்ற உறுப்பினரான என்னை ‘பன்றி’ என்று அழைக்கப்பட்டபோது, அந்நேரத்தில் நான் அந்த எதிர்க்கட்சி உறுப்பினர் மீது உபயோகிக்கக்கூடிய சிறந்த வார்த்தையும் அதுவாகவே தான் இருந்தது” என்று அவர் நேற்று இரவு ஊடகங்களில் பதிவேற்றிய வீடியோ கிளிப்பில் கூறினார்.
இதற்கிடையில், நோர்ஹிசாம் ஆரம்பத்தில் அமைதியாக இருந்ததாகவும், ஆனால் “தூண்டுதலுக்கு” பின்னர் மாறியதாகவும் கூறினார்.
“இதுதான் எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எனக்கு கோபம் வந்தபோது, யார் பன்றி? யார் பன்றி சாப்பிடுபவர்? என்று நான் அவரிடம் கேட்டேன்.’
“முகம் பன்றியைப் போல இருந்தால், அதற்காக பன்றியைப் போல நடந்து கொள்ளக் கூடாது,” என்று அவர் கூறினார்.
பி.கே.ஆரைச் சேர்ந்த நோர்ஹிசாம் மற்றும் முகமட் ஜய்லானி காமிஸ் ஆகியோர் பாக்காத்தான் அணியை விட்டு விலகி தங்களின் ஆதரவை எதிர்க்கட்சிக்கு திருப்பியதை அடுத்து மலாக்காவில் பாக்காத்தான் அரசாங்கம் கவிழ்ந்தது.