இன்று மே 12, உலக செவிலியர் தினம், உலக நாடுகள் அனைத்திலும் கொண்டாடப்படுகிறது. சமூகத்திற்கு செவிலியர்கள் ஆற்றும் பங்கை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த ஆண்டின் செவிலியர் தினக் கரு, “வழிநடத்த ஒரு குரல்: உலகை ஆரோக்கியத்திற்கு இட்டு செல்லுதல்” “A Voice to Lead : Nursing The World To Health”.
முந்தைய கொண்டாட்டத்திற்கு மாறாக, 2020 உலக செவிலியர் தினம் நிச்சயமாக மலேசியா உட்பட உலகெங்கும், செவிலியர் தொழிலில் ஒரு புதிய வரலாற்றைக் கொண்டுள்ளது.
உலகம் கோவிட்-19 தொற்றுநோயுடன் போரில் ஈடுபட்டுள்ளது. இந்த உயிர்கொல்லி நோய் பரவுவதைத் தடுப்பதற்கான பெருஞ்சுவர்களாக இருக்கும் முன்னணி வீராங்கனைகளில் செவிலியர்களும் உள்ளனர்.
மருத்துவத்துறையின் முதுகெலும்பெனப் போற்றப்படும் செவிலியர்கள், தங்கள் நேரத்தையும், ஆற்றலையும், உணர்வுகளையும் தியாகம் செய்வது மட்டுமல்லாமல், பலர் தங்கள் மனைவியையும், கணவனையும், அன்புக்குரியவர்களையும் பிரிந்து, நாட்டிற்கு தங்கள் கடமையை நிறைவேற்றுவதற்காக வெளியே செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
செவிலியரின் சேவை, அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தை சமூகம் தொடர்ந்து மதிக்கட்டும். கொரோனா கிருமி பரவி வரும் இந்த நேரத்தில் செவிலியர் ஆற்றி வரும் உன்னத தொண்டினை போற்றும் வகையில் செவிலியர் தினத்தை மதித்து போற்றலாம்.
உலக செவிலியர் தின வாழ்த்துக்கள் 2020. #KitaMestiMenang!