பேராக்கின் புதிய அரசாங்கம் நேர்மையாக இருக்க வேண்டும் என்றார் சுல்தான் நஸ்ரின்

அங்கீகாரம் பெற்ற புதிய மாநில அரசு, அந்நம்பிக்கையை நேர்மையுடனும் செயல்படுத்த வேண்டும் என்று பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா கூறினார்.

“நம்பகமான நிர்வாகத்தை விரும்பும் என் நம்பிக்கை எப்போதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும், தூய்மையான தலைமைத்துவத்தை விரும்பும் மக்களின் நம்பிக்கை நிறைவேற வேண்டும். அரசியலுக்கு எல்லைகள் உள்ளன, அரசியலில் கட்டுப்பாடுடன் செயல்படுங்கள்” என்றார்.

“மக்களின் நலன் தியாகம் செய்யப்படக்கூடாது, தனிப்பட்ட லாபத்துக்காகவோ, அதிகப்படியான அரசியல் சமரசத்திற்காகவோ, அல்லது தனிப்பட்ட செல்வத்தை குவிப்பதற்கான பேராசைக்காகவோ, எல்லை அறியாமல் செயல்படக்கூடாது” என்று அவர் கூறினார்.

மார்ச் மாதம் அமைக்கப்பட்ட தேசிய கூட்டணியின் (பி.என்) புதிய அரசாங்க நிர்வாகத்தின் கீழ் முதல் பேராக் மாநில சட்டசபை திறப்பு விழாவில் அரச ஆணையை வழங்கும்போது சுல்தான் நஸ்ரின் இவ்வாறு கூறினார்.

பேராக்கில் உள்ள பி.என் அரசாங்கத்தில் 25 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள், பெர்சத்துவைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் பாஸ் கட்சியில் இருந்து ஒருவர் அடங்கியுள்ளனர். பி.என்.-இல் பெர்சத்து சிறுபான்மை கட்சியாக இருந்தபோதிலும், மார்ச் 13 அன்று சுல்தான் நஸ்ரின் மீண்டும் அஹ்மத் பைசாலை மந்திரி புசாராக தேர்ந்தெடுத்தார்.

கோவிட்-19 தொற்றுநோயைப் பற்றி, சுல்தான் நஸ்ரின் இதை ஒரு பேரழிவு என்று வர்ணித்து, மக்கள் தங்கள் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களைச் செய்யத் தயாராக இருப்பார்கள் என்று நம்புவதாகக் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளை அமல்படுத்துவதால் ஏற்படும் சிக்கல்கள் இருந்தபோதிலும், அதனால் சுற்றுச்சூழல் தரத்தின் மேம்பாடு குறித்து சுல்தான் நஸ்ரின் குறிப்பிட்டுள்ளார்.

“பூமி ஓய்வு பெற்று மீண்டு வருவது போன்றுள்ளது.”

இதற்கு முன் சுற்றுச்சூழலை புறக்கணித்ததற்கு எதிராக இது ஒரு “எச்சரிக்கை மணி” என்று அவர் கூறினார்.

“சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், அது ஒருபோதும் சமரசம் செய்யப்படக் கூடாது.

“சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான வலுவான மற்றும் உடனடி அமலாக்க நடவடிக்கைகள் பொறுப்பான நிறுவனங்களால் செயல்படுத்தப்பட வேண்டும்,” என்றார்.