2 பி.கே.ஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகல், கெடா மாநிலம் பெரிக்காத்தான் கைகளில் விழுகிறது

டாக்டர் ராபர்ட் லிங் குய் ஈ மற்றும் அஸ்மான் நஸ்ருதீன் ஆகியோர் செய்தியாளர் கூட்டத்தில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

கெடாவில் உள்ள இரண்டு பி.கே.ஆர் சட்டமன்ற உறுப்பினர்கள், டாக்டர் ராபர்ட் லிங் குய் ஈ (சிடாம்) மற்றும் அஸ்மான் நஸ்ருதீன் (லூனாஸ்) ஆகியோர் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.

பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிமின் தலைமை மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக லிங் இன்று பிற்பகல் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஆழ்ந்து பரிசீலித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அஸ்மான் கூறினார்.

“ராபர்ட்டும் நானும் பிரதமர் முகிதீன் யாசினுக்கு ஆதரவளிக்கிறோம்” என்று அஸ்மான் கூறினார்.

அவர்கள் இருவரும் இனி பி.கே.ஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை என்று கூறினர்.

லிங் மற்றும் அஸ்மானின் அறிவிப்புடன், முக்ரிஸ் மகாதீருக்கு இப்போது மாநில சட்டசபையில் 17 இடங்களும், எதிர்க்கட்சிக்கு 19 இடங்களும் உள்ளன.

அதே நேரத்தில், கெடா தேசிய கூட்டணி (பி.என்) ஒரு சிறப்பு ஊடக சந்திப்புக்கு ஒரு அழைப்பை வெளியிட்டது, இது இன்று பிற்பகல் 3 மணிக்கு கெடா பாஸ் வளாகத்தில் நடைபெற உள்ளது.