மொத்தம் 36 கெடா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கெடாவின் சுல்தான், அல் அமினுல் கரீம் சுல்தான் சல்லேஹுதீன் சுல்தான் பத்லிஷாவை, அலோர் செட்டாரில் உள்ள விஸ்மா டாருல் அமானில் நாளை சந்திக்க உள்ளனர்.
இந்த விஷயத்தை உறுதிப்படுத்த தேசிய கூட்டணி (பி.என்), பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) மற்றும் பேபாஸை சேர்ந்த பல சட்டமன்ற உறுப்பினர்களை இன்று தொடர்பு கொண்ட போது இதனை உறுதிபடுத்தினர்.
நாளை பிற்பகல் சுல்தான் சல்லேஹுதீனை சந்திக்கக் கோரி அரண்மனையிலிருந்து தனக்கு அழைப்புக் கடிதம் வந்ததாக அலோர் மெங்க்குடு சட்டமன்ற உறுப்பினர் டத்துக் பஹ்ரோல்ராஜி முகமட் சவாவி தெரிவித்தார்.
டிஏபி சட்டமன்ற உறுப்பினர் தெஹ் ஸ்வீ லியோங் (கோட்டா டாருல் அமான்) அழைப்பையும் உறுதிப்படுத்தினார்.
இந்த அழைப்பு, கெடாவின் அரசியல் முன்னேற்றங்களைப் பற்றியது என்று நம்பப்படுகிறது. செவ்வாயன்று, இரண்டு பி.கே.ஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்து, பிரதமர் முகிதீன் யாசின் தலைமையில் பி.என் அரசாங்கத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தினர்.
அதே நாளில், கெடா மாநில எதிர்க்கட்சித் தலைவர் முகமட் சனுசி நோர் 36 பேரில் 19 பேர் மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் தலைமையில் நம்பிக்கையை இழந்துவிட்டதாக அறிவித்தனர்.
பெர்சத்துவின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் முக்ரிஸ் மீது நம்பிக்கையை இழந்துவிட்டதாக முகமட் சனுசி கூறினார்.