ஜாலான் புடுவில் சில பகுதிகள் நேற்று முன்தினம் முதல் முட்கம்பி வேலிகளால் தடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த பகுதி தீவிர நடமாட்டக் கட்டுப்பாட்டில் இல்லை என்று போலீசார் கூறுகின்றனர்.
ஜாலான் புடுவிலுள்ள டி மெஜஸ்டிக் பிளேஸ் தங்கும் விடுதிக்கு அருகிலுள்ள பகுதியில் இருந்து ஜாலான் லண்டாக் வரை முள் கம்பி ஒன்றை அமைக்க அதிகாரிகள் நேற்று இரவு 10 மணியளவில் வந்ததாக தடைசெய்யப்பட்ட பகுதியில் உள்ள ஒரு வெளிநாட்டு தொழிலாளி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
தான் என அழைக்கப்படும் ஒரு அச்சுக் கடை உரிமையாளர், நேற்று பிற்பகல் ஒரு பேருந்து, டஜன் கணக்கான வெளிநாட்டினரை அப்பகுதிக்கு அழைத்துச் சென்றதைத் தொடர்ந்து ஏதோ நடக்கிறது என்று உணர்ந்ததாகக் கூறினார். அவரது கடை ஜாலான் புருனாய் முள்வேலியில் இருந்து ஏழு மீட்டர் தொலைவில் உள்ளது.
சில கடை உரிமையாளர்கள் அந்த பகுதிக்குள் நுழைய முடியாமல் விரக்தியடைந்ததாகவும், அதே நேரத்தில் கடை உரிமையாளர்கள் சிலர் தடைசெய்யப்பட்ட பகுதியில் சிக்கிக் கொண்டனர் என்றும் தெரிகிறது.
அந்த பகுதியில் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை (பி.கே.பி.) அதிகாரிகள் பலப்படுத்தியுள்ளதாக கோலாலம்பூர் காவல் தலைவர் மஸ்லான் லாசிம் தெரிவித்தார்.
“இது ஒரு பொது முடக்கம் (lockdown) அல்ல. ஆனால் பி.கே.பியை பலப்படுத்தப்படுகிறது. சாவ் கிட் சந்தையில் நாம் செய்ததைப் போன்றது” என்று அவர் கூறினார்.