இன்று காலை கெடா சுல்தான் அல் அமினுல் கரீம் சுல்தான் சல்லேஹுதீன் சுல்தான் பத்லிஷாவைச் சந்திக்க பாஸ், அம்னோ மற்றும் பேபாஸைச் சேர்ந்த 19 கெடா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அலோர் செட்டாரில் உள்ள விஸ்மா டாருல் அமானுக்கு வந்தனர்.
காலை 9.15 மணி முதல் வந்தவர்களில், எதிர்க்கட்சித் தலைவர் முகமட் சனுசி நோர் (ஜெனரி), டத்தோ டாக்டர் முகமட் ஹயாத்தி ஓத்மான் (தோக்காய்), டத்தோ சிட்டி ஆஷா கசாலி (மெர்பாவ் புலாஸ்), டத்தோ சுராய யாகோப் (சுங்கை தியாங்) மற்றும் டத்தோ நோர் சப்ரினா முகமட் நோர் (பண்டார் பாரு) ஆகியோர் காணப்பட்டனர்.
கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் நிலை சம்பந்தப்பட்ட அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெறுவதாக நம்பப்படுகிறது.
ஊடக தரப்பினர் விஸ்மா டாருல் அமானுக்குள் நுழைய அனுமதிக்கப்படவதில்லை. அவர்கள் கெடா மாநில அரசு வளாகத்திற்கு வெளியே காத்திருக்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
பக்காத்தான் ஹராப்பான் சட்டமன்ற உறுப்பினர்கள் மதியம் சுல்தான் சல்லேஹுதீனை சந்திக்க உள்ளனர் என்பதாகத் தெரிகிறது.
கெடாவில் 36 சட்டமன்றங்கள் உள்ளன.
பி.கே.ஆர் (ஏழு), பெர்சத்து (ஆறு), அமானா (நான்கு) மற்றும் டிஏபி (இரண்டு) ஆகிய 19 இடங்களுடன் பக்காத்தான் ஹராப்பான் மாநில அரசை வழிநடத்துகிறார்.
அதோடு, பாஸ் 15 இடங்களும், அம்னோவுக்கு இரண்டு இடங்களும் உள்ளன.