கெடா சட்டமன்றம்: ஊடக அறிக்கை வெளியிட அனுமதி இல்லை

கெடா சுல்தான் சல்லேஹுதீன் பத்லிஷாவை சந்தித்த கெடா மாநில தேசிய கூட்டணியின் (பி.என்) சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று ஊடகங்களுக்கு எந்த அறிக்கையும் வெளியிட அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

காலை 9.15 மணி முதல் கூட்டம் நடைபெற்ற விஸ்மா டாருல் அமானுக்கு வெளியே ஊடகங்கள் கூடியிருந்தாலும் இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.

கெடா எதிர்க்கட்சித் தலைவர் முகமட் சனுசி நோரைத் தொடர்பு கொண்டபோது, அவர் “இன்று வாயைத் திறக்க அனுமதியில்லை” என்று கூறினார்.

பாக்காத்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பிற்பகல் சுல்தானை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதாகத் தெரிகிறது.

புதிய அரசாங்கத்தை உருவாக்க 36 சட்டமன்ற உறுப்பினர்களில் 23 பேர் இருப்பதாகக் கெடா பாஸ் கூறியதத் தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் சுல்தான் சந்திக்கிறார்.

இதற்கிடையில், எக்ஸ்கோவின் பதவியேற்பு விழா இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று மாநில செயலாளர் அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் குறிப்பிட்டுள்ளது. நிகழ்வின் ஒத்திகை நாளை நடைபெறும் என்று தெரிகிறது.