நாளை மதியம் 2 மணிக்கு அலோர் செடார் விஸ்மா டாருல் அமானில் நடைபெறும் பதவியேற்பு விழாவுடன், புதிய மந்திரி பெசாரயும் புதிய அரசாங்கத்தையும் கெடா மக்கள் பெறுவர் என தெரிகிறது.
இது, 14வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் அரசாங்கம் கெடா மாநிலத்தை வென்ற பிறகு இரண்டு வருடங்கள் மந்திரி பெசாராக பதவியில் இருந்த முக்ரிஸ் மகாதீரின் நிர்வாகத்தின் முடிவைக் குறிக்கிறது.
பெர்சத்து கட்சி பாக்காத்தான் கூட்டணியை விட்டு விலகிய பின்னர் பாக்காத்தான் மத்திய அரசாங்கம் வீழ்ச்சியைக் கண்டது. மாநில அளவில், முகிரீஸ் மந்திரி பெசாராக தன் நிலைப்பாட்டை பாதுகாக்க முடியவில்லை.
இரண்டு பி.கே.ஆர் சட்டமன்ற உறுப்பினர்களான டாக்டர் ராபர்ட் லிங் குய் ஈ (சிடாம்) மற்றும் அஸ்மான் நஸ்ருதீன் ஆகியோர் கட்சியை விட்டு வெளியேறி, தேசிய கூட்டணிக்கு தங்களின் ஆதரவை அறிவித்ததை அடுத்து, முக்ரிஸ் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை இழந்தார். அதைத் தொடர்ந்து நான்கு பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்களும் வெளியேறினர்.
கெடா சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து மொத்தம் 23 கையெழுத்திடப்பட்ட உறுதிமொழிகள் புதிய மந்திரி பெசார் வேட்பாளரை முன்மொழிந்து கெடா சுல்தான் சல்லேஹுதீன் சுல்தான் பத்லிஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அலோர் செட்டாரில், புதிய மந்திரி பெசார், பாஸ் கட்சியின் ஜெனெரி சட்டமன்ற உறுப்பினர் முகமட் சனுசி நோரின் பதவிப் பிரமாணம் செய்யும் விழாவுக்கான ஏற்பாடுகள் இன்று தொடங்கின.
நாளை மூன்று மணியளவில், சுல்தான் சல்லேஹுதீனின் வருகையைத் தொடர்ந்து, மாநில செயலாளர், புதிய மந்திரி பெசாரை நியமனம் செய்வதாக அறிவிக்கும் கடிதம் ஒரு போலீஸ் மூலத்திலிருந்து ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது.
நேற்று, அனைத்து 36 கெடா சட்டமன்ற உறுப்பினர்களும் மந்திரி பெசாரை நியமிக்க முடிவு செய்வதற்கு முன்னர், சுல்தான் சல்லேஹுதீனை சந்திக்கச் சென்றனர்.
முக்ரிஸ் மற்றும் பாஸ் கட்சியும் நாளை அலோர் செட்டாரில் செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்கள் என தெரிகிறது.
பிப்ரவரி 2016ல், முக்ரிஸ், கெடா மாநிலத்தில் பாரிசான் அரசாங்கத்தை வழிநடத்தியபோது, மாநில சட்டசபையில் பெரும்பான்மையை இழந்த பின்னர் அவர் மந்திரி பெசார் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக அகமட் பாஷா ஹனிபா நியமிக்கப்பட்டார்.