இன்று தங்களின் ஊர்களுக்கு திரும்புவதற்காக மாநிலத்தை கடக்க முயன்ற மொத்தம் 508 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 146 சாலைத் தடைகளில் 238,500 வாகனங்களை ஆய்வு செய்த காவல்துறையினர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இஸ்மாயில் தெரிவித்தார்.
“ஊர்களுக்கு, குறிப்பாக கிராமத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டாம் என்று நாங்கள் கூறினாலும், அது இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.”
“நேற்று, கிராமத்திற்கு திரும்புவதற்காக மாநில எல்லை கடக்க முயன்ற மொத்தம் 508 வாகனங்கள் காவல்துறையினரால் திரும்பி செல்ல உத்தரவிடப்பட்டன.”
“எனவே சாலைத் தடைகள் தொடங்கிவிட்டன என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். நடவடிக்கை எடுக்கப்படும், அபராதம் விதிக்கப்படும்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் தினசரி ஊடக மாநாட்டில் கூறினார்.