கெடா மாநில சட்டசபையில் இனி பெரும்பான்மை ஆதரவைப் பெறாத நிலையில், உடனடியாக தனது மந்திரி பெசார் பதவியில் இருந்து விலகுவதாக முக்ரிஸ் மகாதீர் இன்று அறிவித்தார்.
பெர்சத்து கட்சியின் துணைத் தலைவரான அவர், கெடா சுல்தானிடம் இந்த விஷயத்தை சமர்ப்பித்ததாக கூறினார்.
“நான் பெரும்பான்மையை இழந்ததால், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மந்திரி பெசார் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று நான் சுல்தானுக்கு அறிவித்துவிட்டேன்” என்று அவர் இன்று விஸ்மா டாருல் அமானில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
முக்ரீஸ் இரண்டாவது முறையாக மந்திரி பெசார் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதற்கு முன் பாரிசான் அரசாங்கத்தின் கீழ் 2016 ஆம் ஆண்டில் பெரும்பான்மையை இழந்து தனது பதவியில் இருந்து விலகினார்.