அரசாங்கத்தை திரும்பப் பெற்று மக்களின் ஆணையை மீட்டெடுக்க வேண்டும் – பாக்காத்தான்

மக்களின் ஆணையை மீட்டெடுக்கும் நோக்கில், அரசாங்கத்தை திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிடுவதாக பாக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) இன்று தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தலைமையில் டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் வாரிசான் தலைவர் ஷாஃபி அப்தால் போன்ற பி.எச் தலைவர்களிடையே நடந்த சந்திப்பின் பின்னர் இந்த விவகாரம் எதிரொலித்தது.

“அரசாங்கத்தை திரும்பப் பெறவும் மக்கள் ஆணையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை மேம்படுத்தவும் நாங்கள் ஒருமனதாக ஒப்புக் கொண்டுள்ளோம்.”

“டான் ஸ்ரீ முகிதீன் யாசின், நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தனது ஆதரவை நிரூபிக்க தவறியதால் அரசாங்கத்தின் நியாயத்தன்மையில் சிக்கல் இருப்பதாக கூட்டம் ஒப்புக் கொண்டது” என்று அவர்கள் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

முன்னதாக, நாளை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சியின் நடவடிக்கை குறித்து விவாதிக்க இந்த கூட்டம் நடைபெற்றது.

நாளை நடைபெறும் நாடாளுமன்றம், அரச உத்தரவை மட்டுமே கேட்கும் என்றும், வேறு எந்த விவாதங்களும் நடைபெறாது என்றும் தெரிவித்தது. மார்ச் 1 ஆம் தேதி பதவியேற்ற முகிதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கான தீர்மானத்திற்கு இது கதவை மூடியது.

நாடாளுமன்றத்தில் முகிதீனுக்கான ஆதரவை சோதிக்க வேண்டும் என்று பாக்காத்தான் இன்று தனது அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தியது.

“நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் அடையாளம். அதிகாரப் பிரிவினை செயல்முறைகளை தடைகள் இல்லாமல் செயல்படுவதை உறுதிசெய்ய நாடாளுமன்றம் சரியாக இயங்க வேண்டும். அங்கு ஒரு பிரதமருக்கான ஆதரவு சோதிக்கப்பட வேண்டும், உறுதி செய்யப்பட வேண்டும். அதே போல் மசோதா மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும், தீர்க்கப்பட வேண்டும்.”

முகிதீன் அறிவித்த RM260 பில்லியன் பொருளாதார தூண்டுதல் தொகுப்பு இன்னும் நாடாளுமன்றத்தால் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படவில்லை என்றும் பாக்காத்தான் கூறியது.