உலகளவில் கோவிட்-19 பாதிப்புகள் 5 மில்லியன், 328,000 உயிரிழப்புகள்

கோவிட்-19 நேர்மறை பாதிப்புகள் வியாழக்கிழமை 5 மில்லியனைத் தாண்டின. அமெரிக்கா 1.5 மில்லியனுக்கும் அதிகமான பாதிப்புகளைக் கொண்டுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தகவல்கள் இன்று மாலை 6.30 மணி நிலவரப்படி தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், கொரோனா கிருமி பாதிப்பினால் உலகளவில் 328,471 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அமெரிக்கா 93,439 என்ற அதிக இறப்புகளை பதிவாக்கியுள்ளதாகவும், இங்கிலாந்து 35, 786 இறப்புகளையும் மற்றும் இத்தாலியில் 32,330 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த 5,016,171 தொற்றுநோய்களில், அமெரிக்காவில் மொத்தம் 1,551,853 பாதிப்புகளும், ரஷ்யாவில் 317,554 பாதிப்புகளும், பிரேசில் 291,579 பாதிப்புகளும், இங்கிலாந்து 249, 619 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.

இந்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி சீனாவின் வுஹானில் முதல் 41 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நான்கு மாதங்களுக்குள் 3 மில்லியன் நோய்த்தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.