நியூயார்க்கில், லோ டேக் ஜோ அல்லது ஜோ லோவுக்கு (Low Taek Jho / Jho Low) சொந்தமான ஒரு சொகுசு காண்டோமினிய அலகு, அமெரிக்க அரசாங்கத்தால் குறைந்த விலையில் விற்கப்பட்டுள்ளது.
தி ரியல் டீல் (The Real Deal) நிலம், மனை விற்பனை தளைத்தில் ஒரு அறிக்கை, பிரின்ஸ் ஸ்ட்ரீட்டில் (Prince Street) இரண்டு படுக்கையறைகள் கொண்ட அந்த சொகுசு காண்டோவை பெயரிடப்படாத ஒரு நிறுவனத்தால் மொத்தம் 7.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (RM33 மில்லியன்) வாங்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது.
2014 ஆம் ஆண்டில் ஜோ லோ அந்த காண்டோவை வாங்கியபோது செலுத்தப்பட்ட 13.8 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பிடுகையில் இந்த விலை மிகவும் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் 8.5 மில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைக்கப்படுவதற்கு முன்னர், கடந்த ஜூலை மாதம் ஜோ லோவுக்கு சொந்தமான இந்த யூனிட் முதன் முதலில் 9.9 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனைக்கு வழங்கப்பட்டதாக அறிக்கை காட்டுகிறது.
தேசிய நிதியமான 1MDB-யிலிருந்து திருடப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி வாங்கியதை அடுத்து, நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள ஜோ லோவின் சொத்துக்கள் அமெரிக்க அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்படுகின்றன.
நவம்பர் 2012 இல், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஒரு மாளிகையை 38.98 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஜோ லோ வாங்கியதாக அறிவிக்கப்பட்டது. இறுதியாக மார்ச் மாதத்தில் அது 18.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது.
ஜோ லோவின் பிற சொத்துக்களில், 250 மில்லியன் டாலர் மதிப்புமிக்க ஈக்வானிமிட்டி (Equanimity) சொகுசு கப்பலும் அடங்கும்.
கெந்திங் மலேசியாவால் 126 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கப்பட்ட பின்னர் இந்த படகு பின்னர் திரான்குவிலிட்டி (Tranquility) என மறுபெயரிடப்பட்டது.