மலேசியாவில் மேலும் 172 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மொத்த பதிவு செய்யப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 7,417 ஆக உள்ளது.
நண்பகல் நிலவரப்படி, மேலும் 34 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர். மொத்த குணமடைந்துள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 5,979 ஆக உள்ளது.
இது செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின் தற்போதைய எண்ணிக்கையை 1,323 ஆக்குகிறது.
இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, 172 புதிய பாதிப்புகள் குறித்து கூறினார். இதில் ஐந்து இறக்குமதி பாதிப்புகள், 159 மலேசியர் அல்லாத உள்ளூர் நோய்த்தொற்றுகள் மற்றும் எட்டு மலேசியர்களை அடக்கிய பாதிப்புகள் உள்ளன என்றார்.
“கோவிட்-19 இன் எட்டு நேர்மறை பாதிப்புகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றன.
“இவற்றில், நான்கு பாதிப்புகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது,” என்று அவர் புத்ராஜெயாவில் கூறினார்.