டாக்டர் மகாதீர்: முகிதீனை சரியான முறையில் வெளியேற்ற விரும்புகிறோம்

முகிதீன் யாசினை, உரிய செயல்முறையின் மூலம் பதவி நீக்கம் செய்ய விரும்புவதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.

இன்று பிற்பகல் பெர்சத்து கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மகாதீர், முகிதீனை பதவி நீக்கம் செய்வதற்கான முடிவு உச்ச மன்ற கூட்டத்தின் மூலம் மட்டுமே எடுக்கப்படும் என்றார்.

“ஆம், நாங்கள் அவரை நீக்க வேண்டும், ஆனால் நாங்கள் உச்ச மன்ற கூட்டத்தை முதலில் நடத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

உச்ச மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் பாக்காத்தான் ஹராப்பானில் இருந்து பதவியை ராஜினாமா செய்த முகிதீன், கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டாரா என்ற வினாவுக்கு செய்தியாளர்களுக்கு பதிலளித்தபோது மகாதீர் இதனைத் தெரிவித்தார்.