மலேசியாவில் 103 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் இன்றுவரை, மொத்தம் 7,732 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளின் அதிகரிப்பு வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட தொற்றுநோய்களுடன் தொடர்புடையது என்றுள்ளார்.
103 புதிய பாதிப்புகளில், ஏழு இறக்குமதி பாதிப்புகள் ஆகும்.
96 உள்ளூர் தொற்றுநோய்களில், 84 பாதிப்புகள் வெளிநாட்டினரை உள்ளடக்கியது. இதில் நெகிரி செம்பிலான், பெடாஸ் திரளையில் இருந்து 53 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
துப்புரவு நிறுவனங்களின் திரளை சம்பந்தப்பட்ட மொத்தம் 24 பாதிப்புகளும் கண்டறியப்பட்டன.
மலேசியர்கள் சம்பந்தப்பட்ட 12 பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக நூர் ஹிஷாம் கூறினார்.
இன்று நண்பகல் நிலவரப்படி, மேலும் 66 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர். இது, பாதிப்பில் இருந்து மீட்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையை 6,235 ஆக அல்லது மொத்த நோயாளிகளில் 80.64 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளது.
குணப்படுத்தப்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மலேசியாவில் செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 1,382 ஆகும்.
மலேசியாவில் கோவிட்-19 நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக உள்ளது என்று நூர் ஹிஷாம் இன்று கூறினார்.