அமைச்சரவையின் சில உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்ற ஊகம் வெடித்திருக்கும் இவ்வேளையில், பிரதமர் திறை அமைச்சர் ரிட்ஜுவான் முகமட் யூசோப், பெர்சத்து தலைமையகத்தில் இன்று மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்.
அவருடன் மேலும் ஓர் அமைச்சர், ஷாருதீன் முகமட் சால்லேவும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் இருவரும் தேசிய கூட்டணியை ஆதரிப்பதில் இருந்து விலகினால், ஒரு தொங்கு நாடாளுமன்றமாகிவிடும்.
தேசிய கூட்டணிக்கு 111 எம்.பி.க்கள் மட்டுமே இருப்பார்கள், டாக்டர் மகாதீர் முகமட், பக்காத்தான் ஹராப்பான் மற்றும் வாரிசான் ஆகியவையும் 111 பேரைக் கொண்டுள்ளனர்.
மலேசியாகினி ரிட்ஜுவான் மற்றும் ஷாருதீனை தொடர்பு கொள்ள முயன்றது, ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.