பதவி நீக்கம் செய்யப்பட்டதை மறுத்து டாக்டர் மகாதீர் நோட்டீஸ்

பெர்சத்து கட்சியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டதை மறுத்து டாக்டர் மகாதீர் முகமட், கட்சித் தலைமையகத்திற்கும் மலேசிய சங்கங்களின் பதிவாளருக்கும் (ROS) நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதை அவரது வழக்கறிஞர் ஹனிப் கத்ரி சமர்ப்பித்தார்.

நேற்று, பெர்சத்து கட்சியின் பொதுச்செயலாளர் முகமது சுஹைமி யஹ்யா, மகாதீரின் உறுப்பியத்தை ரத்து செய்து ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். பெர்சத்து துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதீர், பெர்சத்து இளைஞர் அணி தலைவர் சையத் சதிக் சையத் அப்துல் ரஹ்மான் மற்றும் பெர்சத்து உச்ச மன்ற உறுப்பினர்கள் மஸ்லீ மாலிக் மற்றும் அமிருதீன் ஹம்சா ஆகியோரின் உறுப்பியமும் ரத்து செய்யப்பட்டது.

மே 18 நாடாளுமன்ற அமர்வின் போது அவர்கள் எதிர்க்கட்சி தரப்பில் அமர்ந்திருந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் ஐந்து பேரும் இந்நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.