மலேசியா தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான மீட்புகளை பதிவு செய்து வருகிறது, மேலும் புதிய பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
இன்று 10 புதிய பாதிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இது மலேசியாவில் மொத்த கோவிட்-19 நேர்மறை பாதிப்புகளின் எண்ணிக்கையை 8,515 பாதிப்புகளாகக் கொண்டு வந்துள்ளது என்றார். அதே நேரத்தில் செயலில் உள்ள பாதிகப்புகளின் எண்ணிக்கை 521 ஆகும்.
“நாட்டின் பத்து பாதிப்புகளில், மூன்று குடிமக்கள் அல்லாதவை, ஏழு மலேசிய நாட்டினர் சம்பந்தப்பட்டவை” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இன்று அனைத்து புதிய பாதிப்புகளும் உள்ளூர் தொற்றிலிருந்து வந்தவை.
மலேசிய குடிமக்கள் குறித்த பாதிப்புகளை அவர் விவரித்தார்.
சிலாங்கூர் – ஐந்து பாதிப்புகள்
சரவாக் – ஒரு பாதிப்பு
சபா – ஒரு பாதிப்பு
குடிமக்கள் அல்லாதவர்களிடையே உள்நாட்டு நோய்த்தொற்றின் மூன்று பாதிப்புகளின் விவரங்கள் பின்வருமாறு:
கோலாலம்பூர் – ஒரு பாதிப்பு
நெகேரி செம்பிலன் – ஒரு பாதிப்பு
சபா – ஒரு பாதிப்பு
டாக்டர் நூர் ஹிஷாம், இன்று கோவிட்-19 இன் நான்கு பாதிப்புகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றன என்றும் அவைகளுக்கு சுவாச உதவி தேவையில்லை என்றும் கூறினார்.
கோவிட்-19 தொடர்பான இறப்புகளில் அதிகரிப்பு இன்று அறிவிக்கப்படவில்லை என்பதை அவர் அறிவித்தார்.
“இதனால், மலேசியாவில் கோவிட்-19 இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 121, அல்லது 1.42 சதவீதமாக உள்ளது” என்று அவர் கூறினார்.
140 பாதிப்புகள் மீட்கப்பட்டு இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஆக, மருத்துவமனையில் இருந்து முழுமையாக குணமடைந்து வெளியேற்றப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 7,873 அல்லது மொத்த பாதிப்புகளில் 92.5 சதவீதம் ஆகும்.