புக்கிட் ஜாலீல் குடிநுழைவு தடுப்பு மூகாமில் ஒரு தாயும் அவரது நான்கு வயது மகனும் கோவிட்-19 கிருமிக்கு ஆளாகியுள்ளனர்.
இன்று மதியம் நிலவரப்படி வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட மூன்று உள்ளூர் தொற்றுநோய்களில் இந்த குழந்தையும் ஒன்றாகும் என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
தடுப்பு மையத்தில் பாதிக்கப்பட்ட முதல் குழந்தை இவர்தான் என்று நம்பப்படுகிறது.
அவர்கள் தற்போது சுங்கை புலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது, புக்கிட் ஜாலீல் குடிநுழைவு தடுப்பு மூகாம் திரளையின் பாதிப்புகளின் எண்ணிக்கையை 645 ஆகக் கொண்டுவருகிறது.