பாக்காத்தானின் பிரதமர் வேட்பாளர் பிரச்சினை குறித்து முன்னாள் பி.கே.ஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கருத்து தெரிவித்துள்ளார்.
மூன்று மாதங்களாக நாட்டை நிர்வகிக்கும் தேசிய கூட்டணியில் நிலைமை முற்றிலும் மாறுபட்டது என்று அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் முகமட் அஸ்மின் அலி கூறினார்.
“போதும் போதும் … பிரதமர் யார் என்று இன்று வரை கூட அவர்களால் முடிவு செய்ய முடியவில்லை.”
“இதை கூட அவர்களால் தீர்க்க முடியவில்லை. இந்த இரண்டு நபர்களும் 1998 முதல் மக்களை தெருக்களுக்கு இழுத்துச் வருகின்றனர், இவர்களால் மக்கள் அரசியல் ஆட்டத்துக்கு இழுக்கப்பட்டுள்ளனர்.”
“அவர் இல்லையென்றால் இவர், இவர் இல்லையென்றால் அவர்” என்று அஸ்மின் அவர் கூறினார். பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் மற்றும் லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மகாதீர் முகமட் ஆகியோரைக் அஸ்மின் குறிப்பிடுகிறார்.
“மூன்று மாதங்களில் (தேசிய கூட்டணி அரசாங்கத்தில்), அடுத்த பிரதமர் யார் என்று யாரும் கேள்வி கேட்கவில்லை. மூன்று மாதங்கள் அமைதியாக, சுமூகமாக சென்றது” என்று அவர் கூறினார்.