டாக்டர் மகாதீர் முகமதுவை மீண்டும் பிரதமராக ஆதரிக்கத் தயாராக இருப்பதாக நேற்று டிஏபி கட்சியின் அந்தோனி லோக் தெளிவுபடுத்தினார்.
“மன்னிக்கவும், எனக்கும் எனது பி.கே.ஆர் இளைஞர் சகாக்களுக்கும் இதில் உடன்பாடில்லை. நாங்கள் இதை ஏற்கவில்லை” என்று ஜோகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதித் தலைவர் மற்றும் பி.கே.ஆர் இளைஞர் பிரிவு தலைவருமாகிய அக்மல் நாசிர் கூறியுள்ளார்.
“எங்களின் இந்த நிலைப்பாடு, பி.கே.ஆர் அடிமட்ட உறுப்பினர்கள் மற்றும் பாக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) ஆதரவாளர்களையும் குறிக்கிறது என்று நான் நம்புகிறேன்.”
“தேசிய கூட்டணி (பி.என்) ஆட்சியிலேயே விடப்பட்டால், நிலைமை தொடர்ந்து மோசமடையும் என்பது உண்மைதான்.”
“மக்களின் ஆணையை மீட்டெடுக்க விரும்பினால், நாங்கள் அவருக்கு இரண்டாவது முறையாக ஆதரவை வழங்குவதற்கு பதிலாக, அந்த ஐந்து பேரையும் பாக்காத்தானுக்கு ஆதரவளிக்கச் சொல்லுங்கள்.”
“நிலையற்ற தன்மைகள் அல்லது நீடித்த வாதங்களால் கட்டுப்படுத்தப்படுவதைக் காட்டிலும், மக்களைப் பாதுகாத்து, சிறந்த மாற்றங்களைக் கொண்டுவரும் ஒரு அரசாங்கத்தை அமைப்பது பாகாத்தானின் கடமையாகும்.”
“பிரதமர் பதவி விலகுவது குறித்து அன்று பாக்காத்தானுடன் கலந்து ஆலோசித்து இருந்திருந்தால், பாக்காத்தான் அரசாங்கத்தின் வீழ்ச்சி ஏற்பட்டிருக்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.”
“பொது நன்மைக்காகவும், மலேசியாவிற்காகவும் கொள்கையுடனும் உண்மையையுடனும் இருங்கள்.”
“முதல் தடவை செய்த அதே தவறை நாங்கள் செய்ய மாட்டோம் என்பதே எங்களின் நிலைப்பாடு.”
“தனிப்பட்ட முறையில் நான் கட்சியின் அடிப்படை போராட்டத்திற்கு திரும்ப விரும்புகிறேன். இளைஞர்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தவும் சிறிது காலம் ஆகலாம். கடவுள் விருப்பத்தில், பாக்காத்தான் மீண்டும் நாட்டை வழிநடத்தும்.” என்று அக்மல் நாசிர் கூறினார்.