ஹன்னா யோஹ்: அதிகார வரம்பு என்ன என்பதும் தெரியும், மலாய் ஆட்சியாளர்களை மதிக்கவும் தெரியும்

‘குழந்தை திருமணம்’ தொடர்புடைய பிரச்சினையில் அவர் வெளியிட்ட கருத்துகள் ஆட்சி செய்யும் அரச தலைவர்களை அவமதிப்பதாக முகமத் நாசிர் திஸாவின் குற்றச்சாட்டுகளை செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா யோஹ் மறுத்துள்ளார்.

அதற்கு பதிலாக, பெண்கள், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு துறையின் முன்னால் துணை அமைச்சராக இருந்த யோஹ், சட்டத்தின் ஆட்சி மற்றும் மலாய் ஆட்சியாளர்கள் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகக் கூறியுள்ளார்.

“நான் ஊழல் ஏதும் புரியவில்லை, மக்களை ஒடுக்கவில்லை. அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தவும் இல்லை. மன்னர்களை நான் மதிக்கிறேன்.”

“ஐந்து ஆண்டுகளாக நான் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் சபாநாயகராக பணியாற்றி வந்துள்ளேன். சிலாங்கூர் சுல்தானின் ஆட்சியின் கீழ் மாநிலத்தில் சட்ட ரீதியான சீர்திருத்தங்களைக் கொண்டுவர நான் எல்லா முயற்சிகளையும் செய்துள்ளேன். அதிகார வரம்பு என்ன என்று எனக்கு தெரியும்” என்று யோஹ் ட்விட்டரில் தெரிவித்தார்.

மலேசியாவின் இஸ்லாமிய மூலோபாய ஆய்வுகள் அமைப்பின் (Institut Kajian Strategik Islam Malaysia (Iksim) தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள நாசிர், திருமணம் தொடர்பான பிரச்சினை உட்பட இஸ்லாமிய குடும்ப விவகாரங்கள் அனைத்தும் மாநில அதிகார எல்லைக்குட்பட்டவை என்று கூறினார்.

எனவே, முஸ்லிம்களுக்கான திருமண வயது வரம்பை திருத்துவதற்கு மத்திய அரசு எடுக்கும் எந்த முயற்சியும் மதத்தின் தலைவராக இருக்கும் சுல்தானின் ஒப்புதலை பெற வேண்டும் என்று அவர் கூறினார்.

“ஹன்னா யோஹ் தனது ட்வீட்டில் மாநிலத் தலைவர்களாக இருக்கும் அரச தலைவர்களின் பங்கை நிராகரிக்கும் முயற்சியாக உள்ளது. டிஏபி இதை புரிந்து கொள்ள வேண்டும்” என்று நாசர் மலேசியாகினியிடம் கூறினார்.

அமைச்சின் கீழ் ‘குழந்தை திருமணம்’ குறித்த தேசிய மூலோபாய திட்டத்தின் நிலை குறித்து யோவின் மார்ச் 9 ஆம் தேதி ட்விட்டர் பதிவு குறித்து போலீசார் விசாரித்துள்ளனர். தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் கீழ் யோஹ் விசாரிக்கப்படுகிறார்.

தற்போதைய மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர், மற்றும் ரந்தாவ் பஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சிட்டி ஜைலா முகமட் யூசோஃப், இஸ்லாமில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் குழந்தை திருமணத்தை தற்காத்துப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

யோஹ், நடப்பது குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியதோடு, சம்பந்தப்பட்ட சிறுவர்களின் தலைவிதியை எதிர்த்துப் போராடுவதில் எதிர்கொள்ளும் கடினங்கள் கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்றும் கூறினார்.

“மக்கள் பிரதிநிதியாக எனது பயணம் எப்போதுமே குழந்தைகள், பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு சிறந்த சேவையைச் செய்வதுமாகவே இருந்துள்ளது. அதை செய்வது எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?”

“அது கடவுளுக்கு மட்டுமே தெரியும்” என்று அவர் ட்விட்டரில் தெரிவித்தார்.