இன்று பிற்பகல் நிலவரப்படி, மலேசியா ஆறு புதிய கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. இப்போது மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,535 ஆக உள்ளது.
இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு பாதிப்புகள் மற்றும் உள்ளூர் தொற்றுநோய்களின் நான்கு பாதிப்புகள் என்று விவரித்தார்.
அவர்கள் அனைவரும் தனிமைபடுத்தப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் சமீபத்திய நான்கு கோவிட்-19 பாதிப்புகளின் விவரங்கள் பின்வருமாறு:
- கோலாலம்பூர் : தஃபிஸ் மையங்களின் சோதனையில் கண்டறியப்பட்ட ஒரு பாதிப்பு;
- சிலாங்கூர்: ‘நோயாளி 8,513’ உடன் நெருங்கிய தொடர்பு கொண்ட குடும்ப உறுப்பினர் பாதிப்பு;
- நெகேரி செம்பிலன்: சரவாக் திரும்புவர்கள் சோதனையில் கண்டறியப்பட்ட ஒரு பாதிப்பு;
- சரவாக்: கிடுரோங் திரளையில் ஒரு பாதிப்பு.
இதற்கிடையில், கோவிட்-19 நோய்த்தொற்றில் இருந்து மேலும் 70 பேர் மீண்டு, மொத்த குணமடைந்த எண்ணிக்கையை 8,070 அல்லது மொத்த பாதிப்புகளில் 94.6 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளனர்.
இப்போது மலேசியாவில் செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையை 344 ஆக்குகிறது.
மூன்று நோயாளிகள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர், எந்தவொருவருக்கும் சுவாச உதவி தேவையில்லை.
மலேசியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 121 ஆகும். புதிய மரணங்கள் எதுவும் இல்லை என்று நூர் ஹிஷாம் இன்று தெரிவித்தார்.