தேசிய கூட்டணியை (பி.என்) அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யும் யோசனையில் அம்னோ இன்னும் ஆர்வம் காட்டவில்லை.
மாறாக, பாஸ் கட்சியுடன் உருவாக்கப்பட்ட தேசியக் கட்சியுடன் (Muafakat Nasional) இருக்கவே அம்னோ விரும்புகிறது.
ஆதாரங்களின்படி, இந்த வாரம் நடைபெற்ற அம்னோ உச்ச மன்ற (எம்டி) கூட்டத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது என்றும், ஆனாலும் அதற்கு அதன் மத்திய தலைவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும் கூறியது.
“அம்னோ முறையாக தேசிய கூட்டணியில் இணைய இன்னும் சம்மதத்தை தெரிவிக்கவில்லை,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
ஜூன் 16 அன்று, கோலாலம்பூரில் உள்ள தனது கட்சி தலைமையகத்தில் அம்னோ உச்ச மன்ற கூட்டம் நடந்தது. அதில், தேர்தலில் கட்சியின் திசையைப் பற்றி விவாதிக்கப்பட்டதாகக் பொதுச்செயலாளர் அன்னுவார் மூசா கூறினார். இருப்பினும், கூட்டத்தில் இட ஒதுக்கீடு போன்றவை பேசப்படவில்லை என்றார்.