கூடுதல் மின்சார உதவி திட்டத்தின் கீழ் (Bantuan Prihatin Elektrik ambahan), RM77-க்கும் குறைவான அல்லது 300kWh-க்கும் குறைவான மின்சார பயன்பாட்டைக் கொண்ட சுமார் நான்கு மில்லியன் அல்லது 52.2 சதவீத உள்நாட்டு பயனர்கள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் என்று மூன்று மாதங்களுக்கு இலவச மின்சாரத்தை அனுபவிப்பார்கள்.
“300kWh (300 கிலோவாட்) மின்சக்திக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் உள்நாட்டு பயனர்கள் ஒரு மாதத்திற்கு RM77 என்று ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கும் RM231 மின்சார கட்டண தள்ளுபடியை பெறுவார்கள் என்று எரிசக்தி மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் சம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.
“முன்னதாக, ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்பட்ட மின்சார உதவி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட மின்சார கட்டண தள்ளுபடிக்கு கூடுதலாக இந்த உதவி மக்களின் சுமையை மேலும் குறைக்கும்” என்று ஷம்சுல் அனுவார் மேலும் கூறினார்.