முஸ்லிம் அல்லாத தம்பதிகளுக்கு திருமண விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
“இந்த அனுமதி, முஸ்லிம் அல்லாத வழிபாட்டு தலங்களில் நடைபெரும் முஸ்லிம் அல்லாத திருமண விழாக்களுக்கும், திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தின் (சட்டம் 164) பிரிவு 28 இன் கீழ் நியமிக்கப்பட்ட திருமண உதவி பாதிவாளர்களை உள்ளடக்கிய மத சங்கங்களுக்கும் பொருந்தும்.”
“திருமண விழாக்கள் 20 பேரை தாண்டக்கூடாது (திருமண உதவி பதிவாளர் உட்பட) மற்றும் கூடல் இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.”
திருமண விழாக்கள், தேசிய பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்) மற்றும் மலேசிய சுகாதார அமைச்சு (எம்.ஓ.எச்) பரிந்துரைத்த தர இயக்க நிர்ணயங்களுக்கு (எஸ்.ஓ.பி.) இணங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இருப்பினும், திருமண வரவேற்பு நிகழ்வுகள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை.
முன்னதாக, நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.பி) கீழ், முஸ்லீம் தம்பதிகள் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுவதாக இஸ்மாயில் அறிவித்திருந்தார்.
ஜூன் 2 ஆம் தேதி, திருமணத்திற்காக மாநிலங்களுக்கிடையிலான பயணம் அனுமதிக்கப்படும் என்றும் அறிவித்தார்.