பிற பாக்காத்தான் கூறு கட்சிகளுடனான பதட்டங்களுக்கு மத்தியில் ஊடகங்களுடன் பேச வேண்டாம் என்று பி.கே.ஆர் தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த பொது அறிக்கையும் செய்ய வேண்டாம் என்று பி.கே.ஆர், மத்திய கவுன்சில் (எம்.பி.பி) வாட்ஸ்அப் குழுவிற்கு ஒரு செய்தியை அனுப்பியதாக புரிந்து கொள்ளப்படுகிறது.
“அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் எம்.பி.பி உறுப்பினர்கள் அனைவருக்கும் ஓர் அறிவிப்பு. தலைவர் அன்வார் இப்ராஹிம் அல்லது பொதுச்செயலாளர், சைஃபுதீன் நாசுஷன் இஸ்மாயில் ஆகியோரிடமிருந்து அனுமதி பெறும் வரை தயவுசெய்து சிறிது காலத்திற்கு ஊடகங்களுடன் பேசுவதைத் தவிர்க்கவும்” என்று அந்த வாட்ஸ்அப் குறுஞ்செய்தி தெரிவித்துள்ளது.
முன்னதாக, அமானாவும் டிஏபியும் டாக்டர் மகாதிர் முகமதுவை பிரதமர் வேட்பாளராக பரிசீலிக்கும்படி அன்வாருக்கு அழுத்தம் கொடுத்திருந்தன.
சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற அன்வார் தவறிவிட்டதாகவும் இது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதற்கு முக்கியமானது எனவும் அவை உணர்ந்ததால் அவ்வாறு கூறியிருந்தன.
இதனால் சில பி.கே.ஆர் தலைவர்கள் அமானா மற்றும் டிஏபி கட்சிகள் அன்வருடன் இல்லை என்று விமர்சிக்க தொடங்கினர்.
இருப்பினும், இரு கட்சிகளும் அன்வாரை பிரதமராக ஆதரிப்பதாகக் கூறினாலும், அதிகாரத்தை மாற்றுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு மகாதீர் ஆட்சி செய்ய விரும்புவதாகவும் கூறினார்.
சபா மற்றும் சரவாக் தொகுதிகளுக்கு, குறிப்பாக 18 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சரவாக் ஜி.பி.எஸ் கட்சிக்கு மகாதீரே விருப்பமான தேர்வு என்று சிலர் கூறுகின்றனர்.
அரசாங்கத்தை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் மகாதீர், பாக்காத்தான் மற்றும் வாரிசான் இருக்கிறது. ஆனால், மகாதீருக்கும் அன்வாருக்கும் இடையிலான பிரச்சினைகள் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளன.