ஜூலை 15 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்

5 மற்றும் 6 ஆம் ஆண்டு மாணவர்கள் ஜூலை 15 ஆம் தேதி மீண்டும் பள்ளி தொடங்குவதாக கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் இன்று அறிவித்துள்ளார்.

1 முதல் 4 ஆம் ஆண்டு வரையிலான மாணவர்கள் ஒரு வாரம் கழித்து ஜூலை 22 ஆம் தேதி பள்ளி தொடங்குவார்கள்.

புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

“மலேசிய கல்வி அமைச்சில் பதிவு செய்யப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இந்த தேதிகள் பொருந்தும்” என்று அவர் கூறினார்.

மலேசியாவின் கல்வி அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் ஜூலை 15 முதல் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.