மலேசியாகினியின் விண்ணப்பத்தை நிராகரித்தது நீதிமன்றம்

மலேசியாகினி இணைய செய்தி ஊடகம் மற்றும் அதன் முதன்மை ஆசிரியர் ஸ்டீவன் கானுக்கு எதிராக அவமதிப்பு வழக்கை வரும் ஜூலை 13 தொடங்க உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

அவமதிப்பு வழக்கைத் தொடங்குவதற்கான அனுமதியைத் தள்ளுபடி செய்ய மலேசியாகினியின் விண்ணப்பத்தை நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய குழு இன்று பிற்பகல் தள்ளுபடி செய்தது.

மலேசியாகினி மற்றும் அதன் முதன்மை ஆசிரியர் ஸ்டீவன் கானுக்கு எதிரான அவமதிப்பு வழக்கைத் தொடங்க வேண்டும் என்பதை சட்டத்துறை தலைவர் இட்ரஸ் ஹருன் நிரூபித்திருப்பதை நீதிபதிகள் குழு ஏற்றதாக தீர்ப்பு அளிக்கப்பட்டது.

குழு உறுப்பினர்களில், நீதிபதி ரொஹானா யூசோப், மலாயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அசாஹர் முகமது; சபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதி அபாங் இஸ்கந்தார் அபாங் ஹாஷிம்; மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முகமட் சவாவி சால்லே, நளினி பத்மநாதன், வெர்னான் ஓங் லாம் கியாட் மற்றும் அப்துல் ரஹ்மான் செப்லி ஆகியோர் அடங்குவர்.

இந்த வழக்கு விசாரணை ஜூலை 13 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடங்கும்.