“நண்பர்கள் எப்போதும் நண்பர்களே”, அன்வார் – குவான் எங் சந்திப்பு

பாக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) பிளஸ் பிரிவின் பிரதமர் வேட்பாளர் தொடர்பாக ஏற்பட்ட குழப்பங்களுக்கு இடையே, டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் இன்று அன்வார் இப்ராஹிமை சந்தித்தார்.

95 வயதான டாக்டர் மகாதீர் முகமது மீண்டும் பிரதமர் பதவியை வகிக்க வேண்டும் என்ற திட்டத்தை டிஏபி கட்சி ஆதரித்த பின்னர் டிஏபி மற்றும் அன்வாரின் உறவில் விரிசல் அறிகுறிகள் தென்பட்டன.

அந்த திட்டத்தின் படி, அன்வார் மகாதீரின் துணை பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும், ஆறு மாதங்களுக்குப் பிறகு பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் முன்மொழியப்பட்டது.

புத்ராஜெயாவை மீண்டும் கைப்பற்ற சபா மற்றும் சரவாக் நா¡டாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து மகாதீருக்கு வலுவான ஆதரவு இருப்பதாக டிஏபி மற்றும் அமானா கருதுகின்றன.

இருப்பினும், அன்வாரை பிரதமராக நியமிக்க பி.கே.ஆர் இன்னும் வலியுறுத்தி வருகிறது.

இதனிடயே, வாரிசான் தலைவர் முகமட் ஷாஃபி அப்தாலை பிரதமராக நியமிக்குமாறு மகாதீர் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து பிரச்சனை மேலும் மோசமடைந்தது.

பாஸ் கட்சி, பிரதமர் முகிதீன் யாசினுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பைக் கொண்டுவருவதால், வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் அமர்வு சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பெர்சத்து தலைவர் முகிதீன் யாசினை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்றும் சிலர் கூறுகின்றனர்.