அம்னோ கட்சித் தலைவரே எனது தலைவர் – புங் மொக்தார் ராடின்

15வது பொதுத் தேர்தலில் முகிதீன் யாசினை பிரதமராக நியமிக்க அம்னோ எடுத்த முடிவு குறித்த விரிவான விளக்கத்திற்காக அதன் தலைவர் அகமட் ஜாஹித் ஹமிடியை சந்திக்கும் என சபா அம்னோ கட்சி தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து தங்களுக்கு இதுவரை எந்த விரிவான தகவலும் கிடைக்கவில்லை என்று சபா அம்னோ தலைவர் புங் மொக்தார் ராடின் தெரிவித்தார்.

“எனக்கு இன்னும் விரிவாக அறிவிக்கப்படவில்லை. ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக மட்டுமே நான் இந்த செய்திகளைப் பற்றி அறிகிறேன். என்னைப் பொறுத்தவரையில், என்ன நடந்தாலும் அம்னோ அதன் தலைவரைக் கொண்டுள்ளது. கட்சித் தலைவரே எனது தலைவர்.”

“அம்னோ கட்சியின் திசையைப் பற்றி விவாதிக்க கட்சித் தலைவரின் மீது சபா அம்னோவுக்கு நம்பிக்கை உள்ளது.”

“இது குறித்து விரிவான விளக்கம் பெற நான் கூடிய விரைவில் தலைவரை சந்திப்பேன்” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

நேற்று, 15வது பொதுத் தேர்தலில் முகிதீன் யாசினை பிரதமராக நியமிக்க அம்னோ மற்றும் பாஸ் கொள்கை அடிப்படையில் ஒப்புக்கொண்டன.

இதற்கிடையில், முகிதீனை அதன் பிரதமர் வேட்பாளராக நியமிக்கும்படியான கட்சியின் முடிவு குறித்து சில அம்னோ தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாக சிங்கப்பூர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.