சினியை தக்க வைத்து பாரிசான் அபார வெற்றி

சினி இடைத்தேர்தலில் பாரிசான் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. பதிவு செய்யப்பட்ட மொத்த 15,231 வாக்காளர்களில் 13,872 வாக்குகளை பாரிசானின் முகமட் ஷாரீம் ஜெய்ன் பெற்றார்.

வாக்குப்பதிவு 73.87 சதவீதம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 239 வாக்குகள் செல்லாததாக பதிவாகின.

தெங்கு ஜைனுல் ஹிஷாம் தெங்கு ஹுசின் மற்றும் முகமட் சுக்ரி முகமட் ராம்லி ஆகியோர் தலா 1,222 மற்றும் 137 வாக்குகளைப் பெற்றனர்.

8.16p.m. – அதிகாரப்பூர்வமற்ற வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் இரண்டு சுயேட்சை வேட்பாளர்களுடன் ஒப்பிடும்போது சினி இடைத்தேர்தலில் பாரிசான் அபார வெற்றியைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

இந்த அறிக்கை எழுதப்பட்ட நேரத்தில், மொத்தம் 20,990 வாக்காளர்களில் பாரிசான் 13,198 வாக்குகளை பதிவு செய்துள்ளது.

சுயேட்சை வேட்பாளர்கள் தெங்கு ஜைனுல் ஹிஷாம் தெங்கு ஹுசின் மற்றும் முகமட் சுக்ரி முகமட் ராம்லி ஆகியோர் முறையே 1,157 மற்றும் 133 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

இன்றைய வாக்குப்பதிவு 74 சதவீதம் ஆகும், அதாவது இன்னும் 1044 வாக்குகள் எண்ணப்படாமல் உள்ளன.