பாக்காத்தான் நிர்வாகத்தால் முயற்சித்தபடி அறிவியல் மற்றும் கணித பாடங்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் ஆங்கிலத்தில் அமைய வேண்டும் என்ற கொள்கையை (PPSMI/பிபிஎஸ்எம்ஐ) நிராகரித்த கல்வி அமைச்சின் முடிவு வரவேற்கத்தக்கது என்று சில தரப்பினர் கூறியுள்ளனர்.
தேசிய கூட்டணி அரசாங்கத்தின் இந்த முடிவு தேசிய மொழியின் எழுச்சிக்கான அறிகுறியாக காணப்படுகிறது.
ஆங்கில மொழி நம் மக்களின் சொந்த மொழி (தாய்மொழி) இல்லை. மற்றும் நம் நாட்டிற்கு அதன் சொந்த தேசிய மொழி இருப்பதால் மக்களில் பெரும்பாலோர் ஆங்கிலத்தில் சரளமாக இல்லாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை.
வளர்ந்த நாடுகளான ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் தென் கொரியா போன்றவற்றிலும் ஆங்கிலத்தில் சரளமாக இல்லாத மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
ஆங்கிலத்தில் சரளமாக இருப்பது என்பது மொழியைப் புரிந்து கொள்ளாதது என்று அர்த்தமல்ல. ஏனென்றால், வளர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் அல்லது வளர்ந்து வரும் நாடுகளான சீனா, ரஷ்யா மற்றும் பிரேசில் போன்றவை அறிவும் தொழில்நுட்பமும் தங்கள் சொந்த மொழியில் மொழிபெயர்க்கப்படலாம் என்பதை அறிந்திருக்கின்றன.
அவசியமானால் ஆங்கிலத்திலிருந்து நவீன சொற்களை ‘கடன்’ வாங்கி பயன்படுத்தலாம். இப்படி செய்யும் போது, தேசிய மொழியின் பயன்பாட்டை குறைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
ஆங்கில மொழியில் சரளம் இல்லை என்றால், அறிவு மட்டத்தில் குறைந்தவர்கள் என கருதுவது தவறு. சிலர், மலேசிய குடிமக்கள் என்று கூறிக்கொண்டாலும், ஆங்கில மொழிக்கே அதிக மதிப்பளிக்கின்றனர். அவர்களுக்கு தேசிய மொழியில் சரளம் இல்லை. சில சொற்களும் கூட புரிவதில்லை.
சில அதிகாரப்பூர்வ விஷயங்களில், குறிப்பாக தனியார் துறையில், தேசிய மொழியை வெளிப்படையாக புறக்கணிக்க நம் நாட்டில் உள்ள அதிகாரிகள் வேண்டுமென்றே அனுமதித்ததாக தெரிகிறது.
தங்கள் தேசிய மொழியின் செல்வாக்கைப் பேணுவதில் நமது அண்டை நாடான தாய்லாந்து மற்றும் இந்தோனேசிய அரசாங்கங்கள் போல நாமும் தேசிய மொழியின் பயன்பாட்டை பேண எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நமது அண்டை நாடுகள் வளரவில்லையா?
நமது தேசிய மொழியைப் பொறுத்தவரை, மலேசியர்கள் குறிப்பாக மலாய் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் மலாய் மொழிக்கு பாகுபாடு காட்டப்படுகிறார்கள், மலாய் மொழியை ஓரங்கட்டுகிறார்கள். மலாய் மொழியை கொல்கிறார்கள்.
வசதி படைத்தவர்கள், வீட்டில் கூட ஆங்கிலம் பேசுவதே வசதியாக இருப்பதாக கருதுகின்றனர். அறிவு, திறன்கள், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப விஷயங்கள் பற்றிய அனைத்து பதிவுகளும் ஆங்கிலத்தில் இருக்கின்றன. அவற்றை தேசிய மொழியில் மொழிபெயர்க்க அதிகாரிகளின் எந்தவொரு தீவிர முயற்சியும் இல்லை.
தேசிய மொழிக்கு பொருளாதார மதிப்பு இல்லை என்றும், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மதிப்பு இல்லை என்ற கருத்தின் விளைவாக, நாட்டில் சில குழுக்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அனைத்துலக பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.
இவ்வாறு உருவாகும் மலேசியாவின் புதிய தலைமுறை, சிறுவயதிலிருந்தே சமூகத்தின் பல்வேறு மட்ட மக்களுடன் இணைந்து பழக விரும்பாமலும், தேசிய மொழியில் பேசவும் கூட தயங்குகின்றனர்.
தேசிய மொழிக்கு அதிகாரமளிப்பதன் வழி, மக்களுக்கு இடையேயான புரிந்துணர்வு மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்துவதோடு, இது சமூகங்களுக்கு இடையே உள்ள இடைவெளியையும் மறைமுகமாகக் குறைக்கிறது. இதனால் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் நியாயமாகவும் சமமாகவும் பகிரப்படுகிறது.