கோவிட்-19: 15 புதிய பாதிப்புகள், ஜோகூரில் ஓர் இறப்பு

கோவிட்-19 15 புதிய பாதிப்புகளும், ஜோகூரில் ஓர் இறப்பும் இன்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்தது.

நாட்டில் கடைசியாக ஜூலை 11 அன்று ஓர் இறப்பு நிகழ்ந்தது.

“இது மலேசியாவில் மொத்த நேர்மறை கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையை 8,779 ஆகக் கொண்டுவருகிறது. எனவே, கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் உள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 103 பாதிப்புகள் ஆகும்.”

“அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர்” என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பதிவு செய்யப்பட்ட 15 புதிய பாதிப்புகளில், நான்கு இறக்குமதி பாதிப்புகள் மற்றும் 11 உள்ளூர் தொற்றுகள் உள்ளன என்றார்.

“வெளிநாடுகளில் பாதிப்பு ஏற்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட நான்கு பாதிப்புகளில் இரண்டு மலேசியர் மற்றும் இரண்டு மலேசியர் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்டுள்ளன. ஒருவர் மலேசியாவிற்கு வேலைக்காகவும் மற்றவர் மலேசியரின் துணையாகவும் உள்ளனர். நான்கு இறக்குமதி பாதிப்புகள் முறையே இங்கிலாந்து (இரண்டு பாதிப்புகள்), இந்தியா (ஒன்று) மற்றும் லிபியா (ஒன்று) ஆகும்.

“நாட்டில் பரவிய 11 பாதிப்புகளில், எட்டு பாதிப்புகள் மலேசியர்களிடையே உள்ளன, மூன்று பாதுப்புகள் மலேசியர் அல்லாதவர்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், கோவிட்-19 பாதிப்பால் ஏற்பட்ட சமீபத்திய இறப்பு ஒரு முதியோர் இல்லத்தில் வசித்தவர் சம்பந்தப்பட்டதாகவும், அவர் ஜூலை 10 ஆம் தேதி காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறிகளை காட்டத் தொடங்கியதாகவும், ஜூலை 17 அன்று மதியம் 12.51 மணிக்கு இறந்துவிட்டார் என்றும் நூர் ஹிஷாம் கூறினார்.

“123-வது இறப்பு (நோயாளி 8770) 72 வயதான மலேசியர், அவர் நீண்டகால உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் கொண்டவர்.”

“அவர் ஜூலை 17, 2020 அன்று ஜோகூரின் என்சே ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவசர பிரிவுக்கு வந்தபோது அவர் இறந்து விட்டார். கோவிட்-19க்கு அவர் நேர்மறையானவர் என்பது உறுதி செய்யப்பட்டது.”

“சுகாதார அமைச்சு அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று நூர் ஹிஷாம் கூறினார்.

மலேசியர்கள் சம்பந்தப்பட்ட உள்ளூர் தொற்று பாதுப்புகள் குறித்து டாக்டர் நூர் ஹிஷாம் சரவாக் நகரில் ஐந்து பாதிப்புகளும், சிலாங்கூர், சபா மற்றும் ஜோகூரில் தலா ஒரு பாதிப்பும் உள்ளன என்று விளக்கினார்.