இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள பிரச்சனைகளில் வேலையின்மை பிரச்சனையும் ஒன்றாக உள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தின் ஆணைப்படி, அன்வார் இப்ராஹிம் (பி.எச்-போர்ட் டிக்சன்) வேலையின்மை குறித்து மனிதவள அமைச்சரிடம் கேள்விகளை சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வேலையின்மை விகிதம் அதிகரிப்பதை சமாளிக்க அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிந்து கொள்ள விரும்புகிறார்.
முகமட் நிசார் ஜகாரியா (பி.என்-பாரிட்) வணிக உரிமங்களை தவறாகப் பயன்படுத்துவது, வணிக உரிமங்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வது மற்றும் வாடகைக்கு விடுவது, எதிர்காலத்தில் அவை மீண்டும் வராமல் பார்த்துக் கொள்வதற்கான உத்திகள் குறித்து வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சரிடம் கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ஐந்தாவது நாளில் நுழையும் நாடாளுமன்றத்தின் அமர்வு, கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) கடைப்பிடித்து, புதிய நடைமுறைகளின் அடிப்படையில் ஆகஸ்ட் 27 வரை நடைபெறுகிறது.