சிலாங்கூரில் நீர் கட்டணத்தில் அதிகரிப்பு இல்லை – மந்திரி பெசார்

கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் சிலாங்கூர் அரசு நீர் கட்டணத்தை அதிகரிக்க திட்டமிடவில்லை என்று அதன் மந்திரி பெசார் அமிருதீன் ஷாரி தெரிவித்தார்.

இருப்பினும், நேரம் வரும்போது நீர் கட்டண பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

“கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பின் போது நீர் கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. எவ்வாறாயினும், சிலாங்கூர் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியதால், நீர் நிர்வாகத்தின் நிலைத்தன்மை பற்றி விவாதிக்கப்பட வேண்டும்.”

இன்றைய நாடாளுமன்ற அமர்வில், கோவிட்-19 தொற்று நிலைமை மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் நீர் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு உறுதியளித்தது.