முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது RM1.69 பில்லியன் வரி கோரிக்கை வழக்கில் நேரடி தீர்ப்புக்காக உள்நாட்டு வருவாய் வாரியத்தின் (ஐஆர்பி) விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று அனுமதித்தது.
இந்த தீர்ப்பின் விளைவாக, நஜீப் உள்நாட்டு வருவாய் வாரியத்திற்கு RM1.69 பில்லியன் வரிகளை செலுத்த வேண்டும்.
நேரடித் தீர்ப்பு என்பது நீதிமன்றம் ஒரு முழு விசாரணை செய்யாமல், எந்தவொரு சாட்சியையும் கேட்காமல், தீர்ப்பை வழங்கும் நிலையாகும்.
நஜிப் மீது அரசு ஜூன் 25, 2019 அன்று RM1.69 பில்லியனைக் கோரி வழக்கு தொடர்ந்தது.