கோவிட் 19: 21 புதிய பாதிப்புகள், செந்தோசா திரளையிலிருந்து எட்டு பாதிப்புகள்

இன்று பிற்பகல் நிலவரப்படி, மலேசியாவில் மேலும் 21 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் எட்டு பாதிப்புகள் சரவாக் நகரின் செந்தோசா திரளையில் இருந்து கண்டறியப்பட்டவையாகும். இதுவரையிலான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,861 ஆக பதிவாகியுள்ளன.

மொத்த புதிய பாதிப்புகளில் ஐந்து வெளிநாட்டில் ஏற்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட பாதிப்புகள் மற்றும் 16 பாதிப்புகள் உள்ளூர் தொற்றுகள் என்றும் சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

பதிவான ஐந்து இறக்குமதி பாதிப்புகளில், மூன்று பாதிப்புகள் மலேசிய குடிமக்கள் சம்பந்தப்பட்டவை, இரண்டு பாதிப்புகள் மலேசியர்கள் அல்லாதவர்கள், அதில் ஒருவர் மலேசியரை திருமணம் செய்து கொண்டவர் மற்றொருவர் வேலைக்காக நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டவர் ஆவர்.

இறக்குமதி பாதிப்புகள் சிங்கப்பூர் (1 பாதிப்பு), ஆஸ்திரேலியா (1 பாதிப்பு), பிலிப்பைன்ஸ் (1 பாதிப்பு), பாகிஸ்தான் (1 பாதிப்பு) மற்றும் கத்தார் (1 பாதிப்பு).

நாட்டில் தொற்று ஏற்பட்ட 16 பாதிப்புகளில், 13 பாதிப்புகள் மலேசியர்களிடையே மற்றும் மூன்று பாதிப்புகள் மலேசியர் அல்லாதவர்களிடமும் கண்டறியப்பட்டுள்ளன.