மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி) அமலாக்கத்தின் கீழ் தளர்த்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) தொடர்பான எஸ்ஓபி-க்களை (SOP) மீண்டும் கடுமையாக்க அரசு இன்று கொள்கை அடிப்படையில் ஒப்புக் கொண்டது.
ஏறக்குறைய ஒரு வாரத்தில் நாட்டில் கோவிட்-19 பாதிப்புகளின் அதிகரிப்பு குறித்த கவலையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
“இந்த முடிவு இன்று பி.கே.பி அமலாக்கம் தொடர்பான அமைச்சர்களின் சிறப்புக் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது.”
நிர்ணயிக்கப்பட்ட இயக்க நடைமுறைகள் (எஸ்ஓபி/SOP) பற்றி குழு நாளை விரிவாக விவாதித்து, அவை திங்களன்று அமைச்சர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்று கோலாலம்பூரில் உள்ள புத்ரா உலக வர்த்தக மையத்தில் இன்று பி.கே.பி.பி-யின் வளர்ச்சி குறித்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.